தூத்துக்குடியில் பஸ் மோதி முதியவர் சாவு

தூத்துக்குடியில் பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்து போனார்

Update: 2022-04-05 15:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 75). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்