விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்காததை கண்டித்து மறியல்

குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்காததை கண்டித்து மறியல்

Update: 2022-04-05 14:39 GMT
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வருவதாகவும் கூறி செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டகுளம், கரியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொட்டகுளம் கிராமம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் தாசில்தார் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த மறியல் காரணமாக சுமார் ஒருமணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்