கவிதை எழுதி வைத்து விட்டு 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கவிதை எழுதி வைத்து விட்டு 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
நாக்பூர்,
கவிதை எழுதி வைத்து விட்டு 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
சிறுமி தற்கொலை
நாக்பூர் அஜ்னி பகுதியில் உள்ள சந்திரமணி நகரை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று இவள் வீட்டின் படுக்கை அறையில் படித்து கொண்டு இருந்தாள். மதியம் 1 மணி அளவில் தாய் உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவிதை எழுதி வைத்துவிட்டு
சிறுமியின் நோட்டு புத்தகத்தை கைப்பற்றி பார்த்தபோது, அந்த சிறுமி கடந்த 2 மாதங்களாக தனது மரணம் தொடர்பாக கவிதை எழுதி வைத்திருந்தாள். “கொரோனா பரவட்டும், நான் சாகிறேன்” என்றும் எழுதியிருந்தாள். தற்கொலை செய்து கொண்ட சிறுமி நன்றாக படிக்கக்கூடியவள் என்று தெரியவந்தது.
சிறுமி தான் சாகப்போவது பற்றி எழுதி வைத்திருக்கும் கவிதைகளை ஆய்வு செய்து, தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.