விஷ மாத்திரை தின்று லாரி டிரைவர் தற்கொலை

விஷ மாத்திரையை தின்று லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-04 23:23 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் வயல் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினசுயம்பு (வயது 57). இவருடைய மகன் பத்மசூர்யா (22). லாரி டிரைவரான இவர் நேற்று தனது தாயாரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரத்தின சுயம்பு புகாரின்பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்