வக்கீல் வீட்டில் திருட்டு

திருவட்டாா் அருேக வக்கீல் வீட்டில் மா்ம நபா்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

Update: 2022-04-04 23:19 GMT
திருவட்டார்:
திருவட்டாரை அடுத்த கண்ணனூர் புது வீட்டு விளையை சேர்ந்தவர் சேம் (வயது 44), வக்கீல். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின் கதவு திறந்து கிடந்தது. உடனே உள்ளே சென்றார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலி, ரூ.6 ஆயிரத்து 750 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்