மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கடையம்:
கடையம் சின்னத்தேர் திடலில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். சம்பன்குளம் கிளை செயலாளர் செந்தில், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் முத்துராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.