மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

செங்கோட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-04 23:11 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கலங்காத கண்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துவிநாயகம் (வயது 60), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கவலையுடன் இருந்து வந்த முத்து விநாயகம் அதிகமாக மது குடித்ததாகவும், இதை அவருடைய பிள்ளைகள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மேலும் மனஉளைச்சல் அடைந்த முத்துவிநாயகம் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முத்துவிநாயகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்