நெல்லையில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்
நெல்லையில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் காசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாநில கிராம பிரசார குழு அமைப்பாளர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை தற்போது நீட் தேர்வு மூலம் மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீடு கிடையாது. நுழைவுத்தேர்வுக்கு தான் முக்கியத்துவம். இந்த புதிய கல்விக்கொள்கை மாநில உரிமையை பறிக்கிறது. இதை எதிர்க்க வேண்டும். அதற்காகதான் இந்த பிரசாரம் நடந்து வருகிறது என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், திராவிடர் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.