குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குருந்தன்கோடு ஒன்றிய அலுவலகத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-04-04 22:04 GMT
திங்கள்சந்தை,:
கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு மூலச்சன்விளை பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் மங்களமேரி, எவரிஸ்டர், சில்வெஸ்டர், ராபின், மூலச்சன்விளை ஊர் தலைவர் அலைக்சாண்டர், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிக்குடங்களை கையில் ஏந்தியபடி குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு எதிராகவும், கட்டிமாங்கோடு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி மெர்சி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வி, இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்களில் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். 15 நாட்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்