நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை
நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று அரியலூர் மேலத்தெருவில் உள்ள அரசு நிலையிட்டான் ஏரி, குறிஞ்சான் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அகற்றப்படும். மேலும் அந்த வீடுகளை சேர்ந்த 72 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் தேளூர், மண்ணூழியில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.