மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் மாவட்டக் குழு சேகர், ஒன்றியக்குழு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.