இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-04 21:07 GMT
நெல்லை:
வடக்கு விஜயநாராயணம் அருகே மேல செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி தாமு (வயது 28). இவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாமுவை நேற்று கைது செய்தனர்.




மேலும் செய்திகள்