கோடரியால் தாக்கி வாலிபர் கொலை

யாதகிரி அருகே கோடரியால் வாலிபரை கொன்ற சகோதரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-04 20:51 GMT
யாதகிரி:

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா எம்பாடா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 33). இவரது தம்பி தேவேந்திர சவுகான் (28). இவர்கள் 2 பேரும் வெளியூரில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் யுகாதி பண்டிகை கொண்டாட சகோதரர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சகோதரர்கள் இடையே திடீரென வாக்குவாதம் உண்டானது.

  அப்போது ஜெயராம் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தேவேந்திர சவுகானை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திர சவுகான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருமித்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட ஜெயராமை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்