கண்மாயில் பிணமாக கிடந்த தொழிலாளி

கண்மாயில் பிணமாக கிடந்த தொழிலாளி

Update: 2022-04-04 20:42 GMT
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள உடப்பன்பட்டியை சேர்ந்தவர் அழகன் (வயது 65). கூலி தொழிலாளி. அழகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலைக்கு சென்ற அழகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை உடையத்தி கண்மாயில் ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கண்மாயில் முட்கள் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி உடலை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன கூலி தொழிலாளி அழகன் என்பது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்