கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று பாண்டாங்குடி விலக்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நத்தம் சிறுகுடியில் இருந்து சிங்கம்புணரிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் திருச்சுனையை சேர்ந்த பிரபாகரன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் செக்கப்பட்டியை சேர்ந்த பிரேம் என்பவரை தேடி வருகின்றனர்.