கத்தியை காட்டி மிரட்டி மின்வாரிய அதிகாரியிடம் மோட்டார் சைக்கிள், பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி மின்வாரிய அதிகாரியிடம் மோட்டார் சைக்கிள், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-04 20:41 GMT
திருச்சி, ஏப்.5-
கத்தியை காட்டி மிரட்டி மின்வாரிய அதிகாரியிடம் மோட்டார் சைக்கிள்,பணம்பறித்தவாலிபரைபோலீசார் கைது செய்தனர்.
இளநிலை பொறியாளர்
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, தேவியாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவர் நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது மாம்பழசாலை வீரேஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் முத்துராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா கீழ சந்தாபாளையம் பகுதியை சேர்ந்த மகாமுனி (36) என்பவர் பணம், மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
செல்போனை பறித்தவர் கைது
*திருச்சி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர்  அபிமன்யு. இவர் மோட்டார் சைக்கிளில் சண்முகா நகர் 5-வது தெருவில் சென்றார். அப்போது  ஸ்ரீரங்கம் ஜெயம் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவர் அபிமன்யுவை அரிவாளால் தாக்கி, அவரிடம் இருந்த விலைஉயர்ந்தசெல்போனைபறித்துசென்றுவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
*திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள தர்பார்மேடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கடை உரிமையாளரான தாராநல்லூர் பகுதியை சேர்ந்த பால்சன் (42) என்பவரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 560 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெண் மாயம்
*திருச்சி கருமண்டபம் ஆரோக்கிய மாதா பகுதியை சேர்ந்தவர் முத்து கருப்பையா. இவரது மகள் பிரியதர்ஷினி (26). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட்  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.
ரூ.1.85 லட்சம் பறிமுதல்
*திருச்சி ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் லாட்டரி  சீட்டுகள் விற்றதாக கருமண்டபம் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (83), கருமண்டபம் குளத்துக்கரை தண்ணீர் டேங்க் அருகே அதே பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (19) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் உறையூர் பகுதியில் ஆன்-லைன் லாட்டரி விற்றதாக  உறையூர் பனிக்க நாடார் தெருவை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.85 லட்சம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்