மூக்கையாதேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்- அரசியல் கட்சியினர் மரியாதை
மூக்கையாதேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உசிலம்பட்டி
மூக்கையாதேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நூற்றாண்டு விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நடந்தது. இதையொட்டி உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், ராஜன்செல்லப்பா பெரியபுள்ளான், மாநில ெஜயலலிதா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன், நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் தலைமையில் மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் குலசேகரபாண்டியன், நகராட்சி கவுன்சிலர்கள் பிரதீப்குமார், ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வீர பிரபாகரன் ,முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யர் என்ற ராமகிருஷ்ணன், சிந்துபட்டி ஊராட்சி தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சி
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் ராஜா ஆதிசேடன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் காசி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பாரதீய பார்வர்டு கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் முருகன்ஜி தலைமையில் மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கட்சி நிறுவன தலைவர் வக்கீல் சங்கிலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.