இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு

இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு;

Update: 2022-04-04 20:40 GMT
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர். 
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் தள்ளுபடி ஆகின.
இந்த இரட்டை கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரிய வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. 
அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதேபோன்று பென்னிக்சின் தாயார் செல்வராணி தரப்பிலும் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்