புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-04-04 20:40 GMT
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறுகலான சாலை 
 விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை குறுகலாக காணப்படுவதுடன் கருவேல மரங்கள் சூழ்ந்து உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தார்சாலை அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிமுத்து, தம்பிபட்டி.
அறிவிப்பு பலகை 
 மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி செல்வதற்கு அறிவிப்பு பலகை இல்லை. இதனால் பொதுமக்கள் வழிமாறி வேறு பாதையில் பல கிலோமீட்டர் தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து சரியான பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே விரகனூர் சுற்றுச்சாலையில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வழித்தடங்களில் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சேதமடைந்த சாலை
 சிவகங்கை மாவட்டம் புதுபட்டி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் அவசர தேவைக்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
தொற்றுநோய் பரவும் அபாயம் 
 மதுரை 19-வது வார்டு ெரயிலார் நகரில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகின்றது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபத்தான மின்கம்பம்
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் கருப்பண்ணசாமி கோவில் தெருவில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் ரேஷன் கடையின் அருகில் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.  எந்த நேரமானாலும் விழும் நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பு 
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இருசக்கர வாகனங்களின் ஆக்்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்