சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

தாளவாடி அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

Update: 2022-04-04 20:15 GMT
தாளவாடியை அடுத்த மல்லன்குழி கிராமத்தில் இருந்து சூசைபுரம் நோக்கி லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. மெட்டல்வாடி அருகே சென்றபோது கட்டுப்பட்டை இழந்து அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்