சேவல் சண்டை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

ஜீயபுரம், ஏப்.5-
திருச்சியை அடுத்த அயிலாப்பேட்டை அருகே உள்ள தெற்கு புலிவலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக ஜீயபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குளித்தலை கணேசபுரத்தை சேர்ந்த விஜயராகவன் (வயது 19), சதிஷ்குமார் (32), குன்ன கவுண்டம்பட்டியை சேர்ந்த வினோத் (29), சங்கர் (30), திருச்சி சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), கோப்பு கல்லுகாடு பகுதியை சேர்த்த சுந்தர்ராஜ் (33), கிருஷ்ணசாமி (30), மேலப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (22), கொடியாலம் சுப்பராயன்பட்டியை சேர்ந்த முருகேசன் (55) உள்ளிட்டவர்கள் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 சேவல்கள், ரூ.3 ஆயிரம் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.