காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம், ராமநத்தம், பெண்ணாடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-04 19:37 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பாலக்கரையில் பெட்ரோல், டீசல் மற்றும்  சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கியாஸ் சிலிண்டரில் பட்டை நாமம் போட்டு மாலை அணிவித்தும், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

இதில் மாவட்ட பொருளாளர் ராஜன், நகரத்தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, இருதயசாமி, ராஜா, லெனின் குமார், வட்டாரத் தலைவர் ராமராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சர்தார் பாஷா, ஜெய குரு, சேதுபதி, சுப்பிரமணியன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம்

ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மங்களூர் வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜா முகமது மற்றும் அசோகன், நல்லத்தம்பி, குணசேகரன், வட்டார துணை தலைவர் சிவக்குமார், ருதுக்குமார், ராமசாமி, குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அன்பரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெய்சங்கர், பெண்ணாடம் நகர தலைவர் கந்தசாமி, வட்டார நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சிதம்பரம், தமிழரசன், ரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கியாஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்