இன்று மின்தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், குட்டதட்டி, செண்பகத்தோப்பு, அத்திகுளம், சித்தாலம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.