பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பால்முருகன். இவர் நேற்று முன்தினம் திருத்தங்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆலாவூரணியை சேர்ந்த பாலமுருகன் (வயது 38) என்பவர் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதை போலீஸ்காரர் பால்முருகன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், போலீஸ்காரரிடம் தகராறு செய்து அவரின் சட்டையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ்காரர் பால்முருகன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.