குளித்தலை
குளித்தலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி மகள் ரிஜிவானா (வயது 17). இவா் முசிறியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இருப்பினும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காத காரணத்தினால், தனது மகளைக் காணவில்லை என மாணவியின் தாய் ்நபிஜாபானு குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.