இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள எதிர்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிராமன் (வயது 35). இவர் ஆலங்குளத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி (35) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அருணாசலபுரம் அருகே இருசக்கர வாகனம் திடீெரன கீழே விழுந்தது. இதில் சங்கிலிராமன், ஆறுமுகச்சாமி ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சங்கிலிராமனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சங்கிலிராமன் மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.