கூலித்தொழிலாளிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு

கூலித்தொழிலாளிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-04-04 19:19 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 24). இவரது தம்பி அசோக் என்பவர் ஒரு பெண்ணிடம் பேசியது தொடர்பாக கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த வைரமூர்த்தி என்பவரது குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது‌. இந்தநிலையில் அரவிந்த் மற்றும் அவரது உறவினர்களான கலைச்செல்வன், கலைமணி ஆகிய 3 பேரும் குளித்தலை- மணப்பாறை சாலையில் கோட்டமேடு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வைரமூர்த்தியின் மகன்களான ராஜலிங்கம்(22), ராசு, கருப்பன் என்கிற ரமேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சசிகுமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியான  கலைச்செல்வனை(21) ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த ஆட்கள் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில் ராஜலிங்கம், ராசு, ரமேஷ், சசிகுமார் ஆகிய 4 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்