பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-04-04 19:16 GMT
கரூர்
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக  பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் புகழூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வேலாயுதம்பாளையத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புகழூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கமல் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்