பாய்லர்ஆலைசி.ஐ.டி.யு.தொழிற்சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்

பாய்லர்ஆலைசி.ஐ.டி.யு.தொழிற்சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-04 19:15 GMT
திருவெறும்பூர்,ஏப்.5-
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் எண்ணூர் 660 மெகாவாட் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான பணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். அந்த பணியை பாய்லர் ஆலைக்கு வழங்க வேண்டும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது தொடர்பான மனுக்களை  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் அவரது தனி உதவியாளரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்