மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்றனர்.;

Update: 2022-04-04 19:13 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரத்தை  சேர்ந்தவர் மஞ்சன பேச்சி (வயது 67). இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரிடம் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். அப்போது அவரிடம் மஞ்சன பேச்சி  மூட்டுவலி இருப்பதாக கூறினார். உடனே  ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகே ஒரு சித்தர் இருப்பதாகவும், அவர் சிறிது நேரத்தில் மூட்டு வலியை சரியாக்கி விடுவதாகவும் கூறினார். பின்னர் அந்த பெண் அவரை அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி பல இடங்களில் சுற்றி விட்டு சித்தர் இல்லை என கூறினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அவர்கள் இருவரும் நின்று கொண்டு இருந்தனர். இதற்கிடையே அந்த பெண், மஞ்சன பேச்சியிடம் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நகை கழற்றி தரும் படி கேட்டுள்ளார். இதையடுத்து மஞ்சன பேச்சியும் அவர் அணிந்திருந்த 3½ பவுன் நகையை கழற்றி கொடுத்துள்ளார். அந்த பெண்ணும், மஞ்சன பேச்சியும் நின்று கொண்டு இருக்கும் போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இவருக்கு மூட்டுவலி அதிகமாக இருப்பதால் இவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் இறக்கிவிட வேண்டும் எனக்கூறி மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் அருகே மஞ்சன பேச்சியை இறக்கி விட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் மாயமாகினர். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வரவில்ைல. அப்போது தான் மஞ்சனபேச்சிைய ஏமாற்றி விட்டு அந்த பெண் நகையை பறித்து சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்