அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-04-04 19:09 GMT
கரூர்
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாகவும், பொதுமக்களின் தாகம் தீர்க்கவும் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றதயு. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளர் சின்னசாமி ஆகியோர் இணைந்து நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். அப்போது இளநீர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், வி.சி.கே.ஜெயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்