ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-04 19:06 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஜவகர் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன், நகர துணைத்தலைவர் சுப்பிரமணி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்