புரட்சிகர பெண்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

புரட்சிகர பெண்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-04 19:01 GMT
கரூர்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கரூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய புரட்சிகர பெண்கள் இயக்கம் மற்றும் தொழிற்சங்க மையம் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய புரட்சிகர பெண்கள் இயக்க மாவட்ட செயலாளர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இயக்கம் மற்றும் தொழிற்சங்க மையத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறும்போது, வீட்டுமனை கேட்டு மனு கொடுத்த மாதர் சங்க தலைவர்களை அவமரியாதை செய்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்