மேப்பூதகுடி வேட்டைகாட்டு மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

வேட்டைகாட்டு மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2022-04-04 18:53 GMT
விராலிமலை:
விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் வேட்டைகாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் பக்தர்களுக்கு அனுமதியின்றி வழக்கம் போல் நடைபெறும் அபிஷேக, தீபாராதனைகள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவித்ததையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்து திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழாவானது நேற்று நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை முதலே மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் பகுதியில் இருந்து பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்