இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-04-04 18:38 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பொதுமக்கள். எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். குழந்தைகளை வைத்து கொண்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. செயலாளர் லோகேந்திரன், பிள்ளாநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் வடிவேல் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்