ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் காந்தி மாளிகை அருகில் நகர காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான வக்கீல் பாச்சல் சீனிவாசன், கவுன்சிலர் லலிதா, நிர்வாகிகள் சண்முகம் கோவிந்தராஜ், மதுரை வீரன், மாணிக்கம், தங்கவேல், ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் சிவ கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.