டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் சாவு

டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-04-04 18:27 GMT
திருவண்ணாமலை, ஏப்.5-

திருவண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கூலித்தொழிலாளி. இவரின் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ் விளையாடுவதற்காக வெளியே சென்றார். 

அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் டிராக்டரில் ஏறி விளையாடி உள்ளார். டிராக்டர் ஓடி கொண்டிருந்தபோது டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த சந்தோஷ் திடீரெனக் கீழே குதித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக டிராக்டர் டிரைலரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்