பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சோளிங்கர், ராணிப்பேட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். சோளிங்கர் நகர தலைவர் கோபால், வழக்கறிஞர் ரகுராம்ராஜி, தாசரதி ஒன்றிய செயலாளர்கள் கார்த்தி உமாபதி பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டர், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஒன்றிய பொது செயலாளர் செல்வம், நகர, பேரூர், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.