‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

Update: 2022-04-04 18:04 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக அண்ணாநகர், பகவதி பாளையம், சாலைப்புதூர், கல்லாங்காட்டு புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

 இந்த நிலையில் இங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலையில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி குழி ஏற்பட்டது. 

இந்தக் குழியில் தடுமாறி விழுந்த ஒருவர் உயிர் இழந்தும், பலர் படுகாயத்துடன் உயிர்தப்பி சென்று உள்ளனர். அத்துடன் குடிநீரும் வீணானது. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. 

அதன்பயனாக தற்போது அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து உள்ளனர். அதன்படி அங்கு பேரூராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர்.

 பின்னர் அங்கு குழாய் உடைந்த இடத்தில் குழி தோண்டி, குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. 

 இதன் காரணமாக காலை முதல் மாலை வரை பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை சென்ற பஸ்கள் அனைத்தும் சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கிவிட்டு சென்றது. 

மாலை குடிநீர் குழாய் சீரமைப்பு முடிந்தும் மீண்டும் பஸ்கள் வழக்கமாக கிணத்துக்கடவுக்குள் வந்து சென்றது.

மேலும் செய்திகள்