வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.;

Update:2022-04-04 23:34 IST
வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. 

அத்துடன்  சாலையோர எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட எல்லைகளை சுற்றிலும் எல்லை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த செடிகள் நன்றாக வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. 

இதனால் சாலையோரத்தில் வனவிலங்குகள் நின்றால் அவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. எனவே சாலையோரத்தில் வளர்ந்து புதர்மண்டி கிடந்த எல்லை செடிகளை வெட்டி அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 

அத்துடன் இந்த சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறும்போது, வால்பாறை மலைப்பாதையில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்வதுடன், மெதுவாக செல்ல வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்