சங்கராபுரத்தில் தூய்மை பணி

சங்கராபுரத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

Update: 2022-04-04 18:04 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மைபணிகள் முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை தலைமை தாங்கினார். செயல்   அலுவலர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு  தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் 1-வது வார்டில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் குழாய், மின்விளக்கு சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றது. .நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆஷாபீ, கவுன்சிலர்கள் சேகர், ரேவதி, சையத் இம்தியாஸ், கவிதா, உமாமகேஸ்வரி, கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்