தேவகோட்டையில் பெட்ரோல் பாட்டில் வீசிய 3 சிறுவர்கள் கைது

தேவகோட்டையில் பெட்ரோல் பாட்டில் வீசிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-04-04 17:44 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டையில் பெட்ரோல் பாட்டில் வீசியது தொடர்பாக 13,14, மற்றும் 17 வயதுள்ள 3 சிறுவர்களை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது சம்பவத்தன்று வட்டப்பனிடம் பீடி கேட்டதாகவும், அதற்கு வட்டப்பன் இல்லை என கூறி திட்டி அனுப்பியதால் ஆத்திரமடைந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீயை பற்ற வைத்து அவர் மீது எரிந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்