மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பட்டாசு கடை உரிமையாளரும் சாவு பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பட்டாசு கடை உரிமையாளரும் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Update: 2022-04-04 17:36 GMT
மத்திகிரி:
ஓசூர் அருகே உள்ள சின்ன எலசகிரியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 30). பட்டாசு கடை உரிமையாளர். இவர் மனைவி அஸ்வதி (24), மகன் மகேஷ் (7), மகள் பிரிதா (8) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் தளியில் இருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே போல பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஸ், சச்சின் ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து தளி நோக்கி சென்ற கார் 2 மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியது. அந்த விபத்தில் சிறுமி பிரிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் அருகே விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்