அஞ்செட்டி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த தொழிலாளி கைது

அஞ்செட்டி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த தொழிலாளி கைது செய்யப்படடார்.

Update: 2022-04-04 17:35 GMT
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள உப்ராணி காப்புக்காட்டில் வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த எருமுத்தனப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாஸ்தப்பா (வயது 40), என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாட்டுத்துப்பாக்கியை வாங்கி வந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் மாஸ்தப்பாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்