மத்திகிரி அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தியவர் கைது
மத்திகிரி அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மத்திகிரி, ஏப்.5
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் மேற்பார்வையில் மத்திகிரி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இதில் பாரந்தூர் பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணமூர்த்தி (வயது28) என்பவர் 96 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை மோட்டார்சைக்கிளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.