கழிவறைக்கு மாணவர்கள் தண்ணீர் எடுத்து சென்ற விவகாரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

பாலக்கோடு அருகே கழிவறைக்கு மாணவர்கள் தண்ணீர் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-04-04 17:35 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கழிவறைக்கு மாணவர்கள் தண்ணீர் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக  பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு பள்ளி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கும்மனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 81 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களே கழிவறைக்கு தண்ணீர் எடுத்து சென்று வந்தனர். இதுகுறித்து வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
மாணவர்கள் கழிவறைக்கு தண்ணீர் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அறிக்கையை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை சென்னம்மாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்