இண்டூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
இண்டூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;
தர்மபுரி:
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இண்டூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.சி.பழனி தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் ரங்கன் வரவேற்றார்.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், தர்மபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணைச்செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் தனபால், கணேசன், லட்சுமி ஜெமினி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கன்னியப்பன், முனுசாமி, நிர்வாகிகள் கேசவன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் நடராஜ் நன்றி கூறினார்.