சிங்கம்புணரி, காரைக்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
சிங்கம்புணரி, காரைக்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்த மற்றும் தாழ்வு மின் அழுத்த, மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிக்காக இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக் கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப் பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கை பட்டி, செருதப் பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக செயற் பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
இதேபோல காரைக்குடி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.