பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-04 17:34 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). தொழிலாளி. இவர் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு பேக்கரி முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார்.

 பின்னர் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மற்றும் அதில் இருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்த பாரதிகண்ணன் (21), திருப்பூர் ராக்கிபாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்