பள்ளிக்கு செல்லாமல் பஸ்சில் சுற்றிய 7ம் வகுப்பு மாணவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

பள்ளிக்கு செல்லாமல் பஸ்சில் சுற்றிய 7-ம் வகுப்பு மாணவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-04-04 17:34 GMT
தர்மபுரி:
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இண்டூர் வழியாக பாப்பாரப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. அப்போது, பஸ்சில் சென்ற 13 வயது மாணவன் செல்லும் இடம் குறித்து கண்டக்டரிடம் முன்னுக்கு பின், முரணாக கூறியுள்ளார். எங்கே இறங்க வேண்டும் என்று கேட்டபோது பதில் தெரியாமல் விழித்து உள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் அந்த மாணவரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த மாணவரிடம் விசாரித்தபோது மதிகோன்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தர்மபுரியில் உள்ள ஒரு பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருவதும் பள்ளிக்கு செல்லாமல் சுற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும் என்று அந்த மாணவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்